மீண்டும் ஒரு சவாலான பயணம். இதில் நான் மட்டும் தான். தங்க நிற கழுகுகளின் கூடாரம் என்னை வரவேற்கிறது. எனது பார்வை ராட்சத கழுகு முதல் எறும்பின் அளவு கொண்ட கழுகு வரை விரிகிறது.உள்ளங்கையில் அடங்கி விடும் கழுகுகளை எடுக்க முயன்ற பொது அதன் கூர்மையான அலகுகள் என்னை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டன.வலி தாங்காமல் அதை விட்டு விட்டு தங்க நிற கழுகுகளின் சாம்ராஜ்யத்திடம் விடை பெற்றேன்.
ஆள் நடமாட்டமில்லாத பாழடைந்த வீடு தெரிகிறது.வீட்டுக்குள் மெல்ல நுழைந்தவுடன் வெள்ளை திரவத்தால் ஒரு மனித சிலையும், கருப்பு திரவத்தால் ஒரு மனித சிலையும் தென் படுகிறது.அருகில் சென்று அந்த சிலைகளை தொட்டவுடன் அவை உயிர் பெற்று என்னை துரத்த ஆரம்பிக்கின்றன.
சிறிய வீடு போல காட்சியளித்த அந்த வீடு பல மடங்கு பெரியதாக உயரவும் நீளவும், எனது ஓட்டம் மறைந்திருந்த அறைகளுக்குள்.பிறகு தான் நான் கவனித்த போது அறை எங்கும் மனிதர்கள் சுய நினைவில்லாமல் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்கிறேன்.மிக உயரத்திலிருக்கும் அறை வரை அந்த சிலை மனிதர்கள் என்னை பின் தொடர்ந்தார்கள்.
அங்கே இரு குழாய்களில் தீக்குழம்பு வடிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் சிலை மனிதர்கள் நின்று விட்டார்கள்.எப்படியோ அவர்களை தீக்குழம்பில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பித்தேன்.சிறு வெளிச்சம் தான் ஒவ்வொரு அறைக்குண்டான சாப-விமோசனம் என்று அங்குள்ள கல்வெட்டுகளில் பதிந்துள்ளது.எனது கைபேசியில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி எல்லா மனிதர்களையும் சிறையிலிருந்து விடுவித்தேன்.