ஞாயிறு, 20 மே, 2012

மெகா கவிதை 25 - நாட்டு நடப்பு (பாகம் 1)

 உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் இறைவனின் படைப்பு;
சுறுசுறுப்புடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் உழைப்பு;
சவால் போட்டிகளில் ஜெயம் கிடைக்க தேவை துடிப்பு;
கிராமங்களில் இப்பொழுதும் மாறாமல் இருப்பது மண்வாசனையுடன் அடுப்பு;
நகரங்களில் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் நாகரீக உடுப்பு;
அரசியல் தலைவர்களின் செல்வாக்கை பிரபலமாக்க அவர்களுக்கு எடுப்பு;
இன்பம் வரும் நேரத்தில் சந்தோஷத்தை வெளிபடுத்த கொடுப்பது இனிப்பு;
துன்பம் வரும் நேரத்தில் துக்கத்தை காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் கசப்பு;
பணக்காரர்கள் தங்களது பிறந்த நாளை கூட கொண்டாடும் முறை சிறப்பு;
ஏழைகள் தங்களது வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு போராடுவதில் தவிப்பு;
உண்மை குற்றவாளிகளை விடுவித்து நிரபராதிகளை தண்டிப்பது தவறான தீர்ப்பு;
மதங்களும் ஜாதிகளும் இல்லாமல் இருக்க செய்யும் சக்தி ஒற்றுமை ஈர்ப்பு;
நோய்களை மட்டுமல்லாமல் எதிரிகளையும் விரட்ட வைக்கும் சக்தி எதிர்ப்பு;

தொடரும் ...

1 கருத்து:

  1. கவிதை 25 நாட்டு நடப்பு - ஒரு நெடுந்தொடர் போல் சில தினங்கள் உலா வரும்...
    நாட்டு நடப்பு ஒரு தொடர் துளியாக கவிதை மழையில் பொழிந்து கொண்டிருக்கும்...

    பதிலளிநீக்கு