ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

கவிதை 14 - கடற்க்கரை காதல்

தூண்டில் போட்டு சிக்காத மீன் 'உண்டு',
தவழ்ந்து செல்லும் கரை ஓரம் ஒரு 'நண்டு',
சூடான சுண்டலுடன் விற்பனை ஆகும் 'வெள்ளைப்பூண்டு',
மெய் சிலிர்க்கும் காற்றோடு காதலர்கள் 'இரண்டு',
வெகு நேரம் காதலி மௌனமாக இருப்பதை 'கண்டு',
காதல் பரிசாக காதலன் கொடுத்தான் 'பூச்செண்டு',
சோகத்தை மறைத்து புன்னகை பூத்தாள் அதை 'ஏற்றுக்கொண்டு',
அவர்களை சுற்றி ரீங்காரம் அடித்தது பொன் 'வண்டு',
அருகே வானில் பட்டம் விட்டு லூட்டியடிக்கும் குட்டி 'வாண்டு',
அடிக்கடி அம்மாவிடமிருந்து வாங்கின திட்டு 'மண்டு',
ஜோடி புறாக்கள் அநேகம் நடத்தியது காதல் 'தொண்டு',
காதல் அபாயம் என எச்சரித்தது சிறை பிடிக்கும் 'கூண்டு',
காதல் அதிசயம் என பதிலடி கொடுத்தனர் காதலை துப்பறியும் 
காதலன்களான ஜேம்ஸ் 'பாண்டு',
புனிதமான காதலை துளி அளவு கூட அசைக்க முடியாது
ஓர் 'அணுகுண்டு',
கடற்க்கரை ஓரம் சங்கமம் ஆகும் காதலர்கள் மறக்கவில்லை 
காதலர்தினத்தை, ஆனால் மறந்து விட்டார்கள் அது எந்த 'ஆண்டு' ....!!!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

1 கருத்து:

  1. very nice "கடற்க்கரை ஓரம் சங்கமம் ஆகும் காதலர்கள் மறக்கவில்லை
    காதலர்தினத்தை, ஆனால் மறந்து விட்டார்கள் அது எந்த 'ஆண்டு' ....!!!"

    பதிலளிநீக்கு