கடந்த கட்டுரையில் மறந்து போன மாயாஜால கற்பனைக்கதைகள் பற்றி எழுதியிருந்தேன். இந்த கட்டுரையில் தேவதை கதைகள் (Fairy Tales), பறக்கும் நாகங்கள் (Dragons), வேதாளங்கள் அல்லது காட்டேரிகள் (Vampires), ஓநாய் மனிதர்கள் (Werewolves) மந்திரவாத குள்ளர்கள் (Dwarfs), மாயலோக கூளியர்கள் (Elves) என்று வியக்க வைக்கும் கற்பனை கதாபாத்திரங்கள் பற்றி பார்ப்போம்.
தமிழில் தேவதை கதைகள் அந்த காலத்தில் பல வடிவங்களில் இருந்திருக்கலாம். தேவதை கதைகளில் நல்ல தேவதைகள் ஆக தேவதூதர்கள், தெய்வங்கள், தேவர்கள், குறும்பு செய்யும் குட்டி தேவதைகள் ஒரு பக்கம் என்றால் கெட்ட தேவதைகள் என்று பேய், பிசாசு, சூனியம், விசித்திர குள்ளர்கள், பூதங்கள், அரக்கர்கள், அசுரர்கள் மறுப்பக்கம் என்று புராண கதைகளிலே படித்திருப்பீர்கள். ஆங்கில புனைக்கதைகளிலும் மாயாஜால திரைப்படங்களிலும் Elves, Dwarves, Dragons, Vampires, Werewolves, Angels, Unicorns, Centaurs , Mermaids, Ghosts, Demons, Devils, Goblins, Zombies, Witches, Trolls, Genies, Black magic, White magic, Giants, Gnomes, Pixies, Immortals, Sorcery என்று வகைகளோ ஏராளம்.

அம்புலி, மிருதன், புலி என்ற தமிழ் திரைப்படங்களில் ஓநாய் மனிதன் (Werewolf), மிருதன் (Zombie), காட்டேரி (Vampire) கதைக்களமாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால் ஆங்கில திரையுலகில் Vampire வகையில் Dracula, Twilight series, Van Helsing, Hotel Transylvania, Underworld என்று எண்ணிக்கையில் அடங்காத திரைப்படங்கள் சொல்லிவிடலாம். காட்டேரிகள் சாகாவரம் பெற்று மனித ரத்தம் சுவைக்கும் இனமாக காலம் காலமாக காட்டியிருப்பார்கள். ஓநாய் மனிதர்களை முழு நிலவில் மட்டும் ஓநாய், மற்ற நாட்களில் மனிதனாக சித்தரிப்பார்கள்.இப்படி ஒவ்வொரு தேவதை கதைகளும் அற்புதமான கற்பனை களஞ்சியம்.

சமஸ்க்ருத புராணங்கள் மற்றும் தமிழ் புராணங்களில் கூட வியக்க வைக்கும் கதைகள் உள்ளன. அதை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.
--சிவசுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக