2100கி.பி
பிரம்மாண்டமான மாளிகை முன் ஒரு நீண்ட வரிசையில் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மாளிகையின் வாசலில் ஒரு எந்திரன் ஒவ்வொரு இளைஞனையும் நிறம், இரத்த பிரிவு, எடை, உயரம், பழக்க வழக்கங்கள் என்று சோதனை செய்து கொண்டிருந்தது. மாளிகையின் உள்ளே மின்திரையில் 50% அறிவாளி, 20% புகை பிடிப்பவன், 30% மது அருந்துபவன் என்று புள்ளி விவரங்களை பார்வையிட்டாள் நல்ல மணமகனை எதிர்பார்க்கும் எந்திர பெண். --சிவசுப்பிரமணியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக