வெள்ளி, 30 டிசம்பர், 2011

கவிதை 2 - வெல்க தோழமை

உணர்ச்சிகளை வெறும் மௌனத்தை வைத்தே புரிந்து கொள்ளும் என் ஆருயிர் தோழா ,
உன் மனக்கதவுகளை திறந்தே வைத்திருப்பதின் மாயமென்ன ....!
நிழல் கூட துணையில்லாத தருணங்களில் , நீ ஆறுதல் அளிக்கும் என் மனதிற்க்கு இனி காயமென்ன ....!

முரட்டு கோபத்தை அடக்கி வைத்திருக்கும் உன் மந்திர புன்னகை ,
மிஞ்சி விடுகறது விலை உயரும் பொன் நகையை ....!
அசட்டு தைரியத்தை அழகாக காட்டும் உன் கண்களின் சைகை ,
அசைக்க முடியாமல் செய்து விடும் மயில் தோகையை...!

பதட்டம் கொண்டு நெஞ்சம் தள்ளாடும் பொழுது ,
உன் காக்கும் கரங்கள் தருமே அடைக்கலம் ....!
கடினமான செயல்களை சுலபமாக செய்து விட்டு ,
அடக்கமாக நீ அமர்ந்திருப்பது அமர்க்களம் ...!

வியக்க வைக்கும் உன் மாறுபட்ட சிந்தனைகள் ,
 
நித்தம் ஒரு அர்த்தத்தை புரிய வைத்தது ....!
நெகிழ வைக்கும் உன் வேறுபட்ட விவாதங்கள் ,
புத்தம் புது பாடத்தை பதிய வைத்தது ....!

மகிழ்ச்சியை கடன் கேட்காமலே கொடுத்தாய் நீ எனக்கு ,
புகழ்ச்சியே வேண்டாம் என்று ஒதுங்கினாய் - மாபெரும் எளிமை உள்ளம் உனக்கு...!

சத்தமில்லாமல் சாதுர்யமாக அசாத்திய சாதனைகளை ,
கண் சிமிட்டும் தருணத்தில் முடித்து விட்டு ,
நீ மெல்ல சிரிக்கும் பொழுது யாவர் முகத்திலும்
பொங்கி வழிகிறது அடடா ஆச்சரியக்குறி...!

உனக்கு கிடைக்கும் வெற்றிகளுக்கு என்னிடமிருந்து ,
வாழ்த்து மடலோ வார்த்தை மழையோ தேவையில்லை என்றாய்..!
என் ஆழ் மனதில் துளிர் விட்டு கண்களில் சிந்தும்
ஆனந்த கண்ணீர் மட்டும் போதும் என்றாய் ....!

உன்னோடு பழகும் ஒவ்வொரு நொடியும்
 உற்சாகமூட்டும் சந்தொஷத்துளிகள் ...!
நம் நட்பை பார்த்து பேராசை படாமல்
இருந்தால் போதும் ஆயிரம் விழிகள்...!

பல விஷயங்களில் நம் அலை வரிசை ஒரு சேர சிந்தித்து
முடிவெடுக்க பலமடைகிறது நம் ஒற்றுமை ..!
அன்போடும் நம்பிக்கையோடும் என்றென்றும் அழிவில்லாமல்
வீர முழக்கத்தோடு தொடர்ந்து வெல்க நம் தோழமை.......!

அன்புடன்,
சிவசுப்பிரமணியன் !

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கவிதை 1 - இயந்திர வாழ்க்கை

இயந்திர வாழ்க்கை

சூரியன் உதிக்கும் நேரம் குயிலோசை கூட கேட்க நேரமில்லாமல்,
காலை உணவு கூட சரியாக உட்கொள்ள முடியாமல்,
பரபரப்புடன் பேருந்தில் பயணம் செய்கையில்,
கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு தாமதமாக அலுவலகத்தின்
உள்ளே நுழைந்த பிறகு,
நகரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ,
ஆரம்பிக்கும் மென்பொருள் வித்தகர்களின் கணினி விளையாட்டு !

தகவல் தொழில் நுட்ப வழர்ச்சியின் விழுக்காடு குறைந்தாலும் ,
மென்பொருள் பொறியியளர்களின் வேலைப்பழு குறையாது !
ஒரு பக்கம் கைபேசியின் அழைப்பு விடாமல் நச்சரிக்க ,
மறு பக்கம் மேலதிகாரியின் கண்டிப்பு விடாமல் எச்சரிக்க,
எந்த பக்கமும் திரும்ப இயலாமல் ,
நேரம் கூட போவதறியாமல் ,
ஒரு மூலையில் உட்கார்ந்து மூளையை கசக்கும் வேலை தான் மிஞ்சியது !

நிறைவேறாத ஆசைகளும் கனவுகளும் மனதில் கொட்டிகிட்டக்க ,
கடந்தகால சறுக்கல்களும் எதிர்கால சிந்தனைகளும் மனதில் சிதறிகிடக்க,
குடும்பத்துடன் குதூகலமாக சில நாழிகைகள் செலவிட மனம் ஏங்குகிறது !

கல்லூரிக்காலங்களில் கை வலிக்க கைபேசியிலுருந்து ,
நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரசித்தோம்!
ஆனால் தற்பொழுது கைவலிக்க விசைப்பலகையிலிருந்து ,
கணினிக்கு புரிந்த நிரல் மொழிகளை அடுக்கி முழித்தோம்!

இயந்திரங்களை மனிதன் கண்டுபிடித்த பிறகு ,
மனிதன் இயந்திரமாக செயல் பட வேண்டிய சூழ்நிலை !
மந்திரங்களை மனிதன் ஓதி முடித்த பிறகு,
தந்திரங்களை விஞ்ஞான பூர்வமாக உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய மனநிலை!

எல்லையில்லா ஆராய்ச்சிகளும் ,
தொல்லையில்லா கண்டுபிடிப்புகளும்,
இயந்திர வாழ்க்கையில் மனித இனத்தையும் குலத்தையும்,
சீர்குலைக்காமல் தொடரட்டும்!

நன்றி!

புதன், 28 ஜனவரி, 2009

கவிதை மழை பொழியட்டும்

தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைத்து தோழர்களுக்கு
இந்த கவிதை மழை சமர்ப்பணம் .


கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என்று அனைத்து தகவல்களையும்
இங்கே தொகுத்து வழங்கலாம்.


நான் செதுக்கி வைத்த சிந்தனைகளும் கற்பனைகளும் இனி இங்கு உலா வருவதை நீங்கள் படித்து ரசிக்கலாம்.உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.


நன்றி!


அன்புடன்,
சிவசுப்ரமணியன்.