செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கவிதை 1 - இயந்திர வாழ்க்கை

இயந்திர வாழ்க்கை

சூரியன் உதிக்கும் நேரம் குயிலோசை கூட கேட்க நேரமில்லாமல்,
காலை உணவு கூட சரியாக உட்கொள்ள முடியாமல்,
பரபரப்புடன் பேருந்தில் பயணம் செய்கையில்,
கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு தாமதமாக அலுவலகத்தின்
உள்ளே நுழைந்த பிறகு,
நகரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ,
ஆரம்பிக்கும் மென்பொருள் வித்தகர்களின் கணினி விளையாட்டு !

தகவல் தொழில் நுட்ப வழர்ச்சியின் விழுக்காடு குறைந்தாலும் ,
மென்பொருள் பொறியியளர்களின் வேலைப்பழு குறையாது !
ஒரு பக்கம் கைபேசியின் அழைப்பு விடாமல் நச்சரிக்க ,
மறு பக்கம் மேலதிகாரியின் கண்டிப்பு விடாமல் எச்சரிக்க,
எந்த பக்கமும் திரும்ப இயலாமல் ,
நேரம் கூட போவதறியாமல் ,
ஒரு மூலையில் உட்கார்ந்து மூளையை கசக்கும் வேலை தான் மிஞ்சியது !

நிறைவேறாத ஆசைகளும் கனவுகளும் மனதில் கொட்டிகிட்டக்க ,
கடந்தகால சறுக்கல்களும் எதிர்கால சிந்தனைகளும் மனதில் சிதறிகிடக்க,
குடும்பத்துடன் குதூகலமாக சில நாழிகைகள் செலவிட மனம் ஏங்குகிறது !

கல்லூரிக்காலங்களில் கை வலிக்க கைபேசியிலுருந்து ,
நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ரசித்தோம்!
ஆனால் தற்பொழுது கைவலிக்க விசைப்பலகையிலிருந்து ,
கணினிக்கு புரிந்த நிரல் மொழிகளை அடுக்கி முழித்தோம்!

இயந்திரங்களை மனிதன் கண்டுபிடித்த பிறகு ,
மனிதன் இயந்திரமாக செயல் பட வேண்டிய சூழ்நிலை !
மந்திரங்களை மனிதன் ஓதி முடித்த பிறகு,
தந்திரங்களை விஞ்ஞான பூர்வமாக உலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய மனநிலை!

எல்லையில்லா ஆராய்ச்சிகளும் ,
தொல்லையில்லா கண்டுபிடிப்புகளும்,
இயந்திர வாழ்க்கையில் மனித இனத்தையும் குலத்தையும்,
சீர்குலைக்காமல் தொடரட்டும்!

நன்றி!